நுண்ணிய எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்கிச் சாதனை


உலகிலேயே மிகச் சிறிய, அதாவது ஒரு மூலக்கூறு அளவிலேயே உள்ள நுண்ணிய எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்கிச் சாதனை படைத்திருக்கிறார்கள், வேதியியல் விஞ்ஞானிகள்.
மருத்துவப் பொறியியல் சார்ந்த மிகச் சிறிய உபகரணங்களை உருவாக்குவதில் இந்தக் கண்டுபிடிப்புப் பெரிதும் உதவும் என்று கருதப்படுகிறது.
டப்ட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மின்சார மோட்டார், வெறும் ஒரு `நானோமீட்டர்’ குறுக்களவு கொண்டது. இதற்கு முந்தைய சாதனை, 200 நானோமீட்டர் அளவு கொண்ட மோட்டாராகும்.
“ஒளி மற்றும் வேதிவினைகளால் செயல்படும் மூலக்கூறு அளவு மோட்டார்களை உருவாக்குவதில் ஏற்கனவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மின்சாரத்தால் இயங்கும் மூலக்கூறு அளவு மோட்டார் உருவாக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. ஓர் ஒற்றை மூலக்கூறுக்கும் மின்சாரத்தைச் செலுத்த முடியும், இயங்க வைக்க முடியும் என்று நாங்கள் காட்டியிருக்கிறோம்” என்கிறார், டப்ட்ஸ் பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் ஈ. சார்லஸ் எச் ஸ்கைக்ஸ்.

Comments

Popular Posts