படித்ததில் பிடித்தது.............(நான் அஜித் ரசிகன்)

 

அஜீத் செய்தது சரியா..?தப்பா..?

நன்றி :oruvarthai.blogspot.com



முன்குறிப்பு : இந்தக் கட்டுரை யாரையும் புண்படுத்த அல்ல. சிந்திக்க மட்டுமே

"ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்"னு சொல்வாங்க..,ஆனா,இங்க கூத்தாடிகளே ரெண்டு பட்டு கெடக்குறாங்க. போன ஒரு வாரமா அதுதான் கோடம்பாக்கத்துல நடந்துகிட்டு இருக்கு.

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுல அஜீத் பேசிய பேச்சும்,அதை ஆதரித்து சூப்பர் ஸ்டார் ரஜினி கைத்தட்டினது,கருத்து சொன்னதுன்னு இப்போ கோடம்பாக்கமே அதகளப்பட்டுக்கிட்டிருக்கு.

சினிமா சங்கங்களை சார்ந்த ஒரு சிலர் அஜீத்தின் பேச்சை எதிர்த்தாலும் பெரும்பாலானவங்க அவருடைய பேச்சை வரவேற்றிருக்கிறார்கள்.குறிப்பாக நடிகர் சங்கத்தில் உள்ள நடிகர் நடிகைகள் அஜீத்தின் பேச்சை வரவேற்றுள்ளதாக தெரிகிறது.

பொதுவா சினிமா உலகம் சார்பில் நடைபெறும் விழாக்களில் முன்னணி நடிகர்,நடிகைகளை கலந்து கொள்ளச் சொல்றது வழக்கமான ஒன்னு தான்.

இதில் விருப்பம் இருக்குறவங்க மட்டுமே கலந்துக்குவாங்க, சில பேர்களுக்கு தனியா போன் பண்ணி நீங்க கண்டிப்பா கலந்துக்கனும்னு கேட்டுப்பாங்க..,அப்படி கேக்குற சமாச்சாரம் தான் இப்போ மிரட்டுற தோணியில போயிருக்கும்னு தோணுது.

அதனால தான் அஜீத் மேடையில மனசு தாங்காம தன்னோட ஆற்றாமைய வெளிக்காட்டிருக்காரு.இதுல நாம கண்டிப்பா யோசிக்க வேண்டிய விஷயம் என்னன்னா எந்த விழாவுக்கும் யாரையும் கட்டாயப்படுத்தி கலந்துக்க சொல்லக் கூடாது.ஆனா அது தான் இப்போ நடந்துக்கிட்டுருக்கு போலருக்கு.

அஜீத்தை பொருத்தவரைக்கும் அவர் தமிழ்சினிமா நடத்துற எந்த விழாவுக்கும் பெரும்பாலும் கலந்துக்க மாட்டாரு. இந்த விஷயம் தமிழ்சினிமா உலகத்துல இருக்குற எல்லோருக்கும் தெரியும்.

சமீபகாலமாக தமிழ்சினிமா உலகில் போராட்டம்,கண்டனக்கூட்டம்,
உண்ணாவிரதம்,கலைவிழா,பாராட்டுவிழா என்று அடிக்கடி ஏதாவதொரு நிகழ்ச்சி நடந்துகிட்டு தான் இருக்கு.அது ஒருவேளை அஜீத் போன்ற முன்னணி நடிகர்களுக்கு எரிச்சலை கிளப்பியிருக்கலாம், அட,என்னடா..? இது எப்போ பார்த்தாலும் விழா.., விழா..ன்னு கடுப்படிச்சிருக்கலாம்.அதுவே அவங்களுக்கு எரிச்சலையும் தந்திருக்கலாம்.

இந்த சமாச்சாரம் ஒரு பக்கம் இருக்க, ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் அஜீத் பேசினது தப்புன்னு காட்டமா ஒரு வாரப்பத்திரிகையில பேட்டி குடுத்துருக்காரு.

என்னமோ இவருக்கு மட்டும் தான் தமிழ் மேலையும்,தமிழ் மக்கள் மேலையும் ரொம்ப அக்கறை இருக்குற மாதிரியும்,என்னமோ இவரு மட்டும் தான் தமிழ் தண்ணியை குடிச்சிக்கிட்டிருக்குற மாதிரியும்,மத்தவங்க எல்லாரும் குஜராத்து தண்ணியை குடிச்சிக்கிட்டிருக்குற மாதிரியும் அஜீத்தை திட்டி தீர்த்திருக்காரு.

அதுக்குப் பொறவு ஏதோ ஒரு கும்பல் அவரு வீட்டு மேல கல்லை எறியப்போக
இப்போ அது சாதி பிரச்சனையா மாறி அவர் சார்ந்திருக்குற சமூகம் எல்லாம் சேர்ந்து அஜீத்துக்கு எதிரா போராட்டம் பண்ண யோசிக்கிற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்டாரு...(இதுக்குத்தானே ஆசைப்பட்டீங்களா ஜாக்குவார்..?)

பேட்டியில தமிழ் தமிழ்னு கொந்தளிச்ச அவரு, எனக்கு நியாயம் கிடைக்க தமிழ் ஆர்வலர்களை திரட்டி அஜீத் வீட்டு முன்னாடி போயி முற்றுகை போராட்டம் பண்ணுவேன்னு சொன்ன அவரு அந்த வேலையை செய்யல,அத விட்டுட்டு அவர் சார்ந்திருக்குற சமுதாய மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் பண்ண  கிளம்பிட்டாரு..,(என்னா ஒரு தமிழ் உணர்வு பாருங்க.)


நாமளும் தமிழன் தான்,நமக்கும் தமிழ் மேலேயும்,தமிழ் மக்கள் மேலேயும் அக்கறை இல்லாமலா இருக்கு, இல்லேன்னா நமக்கும் தமிழ் உணர்வு இல்லையா..? ஈழத்துல நம்ம இன மக்களை சிங்கள வெறியர்கள் கொன்னப்போ நம்மால என்ன செய்ய முடிஞ்சது?

அட இலங்கையை விடுங்க.., நம்ம இன மக்களை அழிக்க பல கோடி ரூபாய்க்கு ஆயுதங்களை கொடுத்து உதவி பண்ணின இங்க இருக்குற நம்ம மத்திய அரசை நம்மால என்ன செய்ய முடிஞ்சது.குறைஞ்ச பட்சம் அந்த ஆயுதம் கொடுத்தலையாவது தடுக்க முடிஞ்சதா? அப்புறம் என்ன தமிழ்? அப்புறம் என்ன தமிழ் மக்கள்? நம்மல்ல தமிழ் இன உணர்வோட எத்தனை பேர் ஒற்றுமையா இருக்கோம்?சொல்லுங்க.., யாருமே இல்லையே?

எங்க நம்ம வீரத்தை காட்டனுமோ அங்க நாம காட்டுறதில்லை,அதை விட்டுட்டு எந்த வம்பு தும்புக்கும் போகாம,தான் உண்டு தன்னோட வேலை உண்டுன்னு இருக்குற ஒரு நல்ல மனிதரை வம்புக்கு இழுத்து சண்டை போடுறது அவ்வளவு நல்லா  இல்லை.

தமிழ் சினிமா சார்புல நடக்குற ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் இதெல்லாம் சரி தான்,. ஆனால் அதனால என்ன பிரயோஜனம்.இலங்கையில சண்டை நடந்தப்போ இங்க நாம உண்ணாவிரதம் இருந்ததுனால உடனே அங்க போரை நிறுத்திட்டாங்களா...என்ன? இல்லையே?

அதனால தேவையில்லாம நேரம் காலம் தான் வீணா போச்சி. அதுக்காக ரெண்டு மூணு நாட்கள் படப்பிடிப்பை நிறுத்துனதுனால பல கோடி ரூபாய் நஷ்டமாச்சி,மத்தப்படி இந்த ஆர்ப்பாட்டம், போராட்டங்களால என்ன பிரயோஜம் இருந்துச்சி,ஒரு பிரயோஜனமும் இல்லை.முதல்ல இதை நாம  உணரனும்.

சில நடிகர்கள் ரசிகர்களிடம் மட்டும் நல்ல பேரை எடுப்பாங்க,சில பேர் அவர் சார்ந்திருக்குற துறையில நல்ல பேர் எடுப்பாங்க, ஆனால் அஜீத்தை பொருத்தவரை எல்லார்கிட்டேயும் நல்ல மனிதர் அப்படிகிற நல்ல பேரை சம்பாதிச்சவர்.

இன்றைக்கும் பத்திரிகையாளர்களை சந்திச்சா (லேட்டஸ்டா நடந்த அசல் படத்தோட சந்திப்பு உட்பட...) முதல்ல ஒவ்வொரு பத்திரிகையாளர்களையும் தனித்தனியா சந்திச்சி அவங்க குடும்பத்தோட நலத்தை விசாரிச்சிட்டு அப்புறம் தான் பேட்டி குடுக்கவே ஆரம்பிப்பாரு.

அதே மாதிரி பத்திரிகையாளர்களும் எந்த நடிகர் கூடையும் நின்னு போட்டோ எடுக்க ஆசப்படமாட்டாங்க. ஆனா அஜீத் கூட மட்டும் தான் பத்திரிகையாளர்கள் நின்னு போட்டோ எடுத்துக்குவாங்க.இது அஜீத்தோட எல்லா பத்திரிகையாளர் சந்திப்புலேயும் நடக்கும்.

அந்த அளவுக்கு எல்லோரையும் நல்லா மதிக்ககூடியவர், சிறியவர்,பெரியவர் என்ற பாகுபாடு பார்க்காதவர்,இப்படியெல்லாம் எழுதுறதுனால நான் என்னமோ அஜீத்தோட ரசிகன்னு நீங்க நினச்சிட வேண்டாம். நியாயத்தை யார் வேணும்னாலும் சொல்லலாம்.

இந்த சமாச்சாரத்தை பொருத்தவரைக்கும் அஜீத் பண்ணின ஒரே தப்புன்னு பார்த்தா  என்ன தெரியுமா..?

சினிமா தொழிலாளர்களுக்கு நிலம் குடுத்ததுக்காக நடந்த பாராட்டு விழாவுல இந்த விஷயத்தை பத்தி பேசினது தான். வேற ஏதாவது ஒரு விழாவுல இதை அவர் பேசியிருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது.

ஏன்னா, இன்னைக்கு சினிமா பணம் கொட்டுற வியாபாரமாக பாக்கப்பட்டாலும் அதுல தொழிலாளர்களோட வாழ்க்கை தரம் ரொம்ப மோசமான நிலைமையில தான் இருந்துகிட்டு வருது. ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாம இருக்குறவங்க.,பல வருஷமா சினிமாவுல இருந்தாலும் இன்னும் தனக்குன்னு ஒரு வீடு இல்லாம இருக்குறவங்கன்னு சினிமாவுல அதை சார்ந்திருக்குற தொழிலாளர்கள் படுற கஷ்டங்கள்,வேதனைகள் சொல்லி மாளாது.

அப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் வசிக்கிறதுக்கு நிலம் குடுத்ததுக்காக நடந்த பாராட்டு விழாவுல அஜீத் பேசினது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்.

மத்தபடி அவர் பேசினதுல கண்டிப்பா நியாயம் இருக்கு.இந்த மேட்டர்ல ஜாக்குவார் தங்கத்தை பொருத்தவரைக்கும் அவர் ஏற்கனவே பாப்புலரா இருக்குற அஜீத்தை வெச்சி தனக்கு நல்ல பப்ளிசிட்டியை தேட ஆசப்பட்டாரு அதுவும் நடந்து போச்சி.

ஆக மொத்தத்துல கலங்கள் இல்லாம இருந்த குளத்துல கல்லெரிஞ்ச கதை தான் இது.எது எப்படியோ அண்ணன்,தம்பி சண்டை வீட்டுக்குள்ள வரலாம் அதுவே தெருவுக்கு வந்தா..? நாம் உட்பட இதை எல்லோருமே யோசிக்கணும்.
-பிளாக்கர் oruvarthai.blogspot.com

Comments

Popular Posts